Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வெனிசுவேலாவில் தேர்தல்: முக்கிய கட்சிகளுக்கு போட்டியிடத் தடை

In உலகம்
Updated: 04:02 GMT, Dec 11, 2017 | Published: 04:02 GMT, Dec 11, 2017 |
0 Comments
1169
This post was written by : Suganthini

எதிர்வரும் 2018ஆம் ஆண்டு, வெனிசுவேலாவில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில், முக்கிய எதிர்க்கட்சிகள் போட்டியிடத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக, அந்நாட்டு ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ அறிவித்துள்ளார்.

ஆனால், வெனிசுவேலாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற மேயர் தேர்தலில் போட்டியிட்ட கட்சிகள் மாத்திரமே ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியுமெனவும் அவர் கூறியுள்ளார்.

300க்கும் மேற்பட்ட நகரங்கள், சிறு நகரங்களுக்கு புதிய மேயர்களைத் தெரிவுசெய்வதற்கான தேர்தல் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. இந்தத் தேர்தலை புறக்கணிப்பதாக 3 முக்கிய எதிர்க்கட்சிகள் கடந்த ஒக்டோபர் மாதம் அறிவித்திருந்தன.

தேர்தல் அமைப்பு பக்கச்சார்பாக உள்ளதாகக் கூறி ஜஸ்டிஸ் பெஸ்ட், பொப்புலர் வில், டெமோக்கிரடிக்; ஆக்ஷன் ஆகிய கட்சிகளின் தலைவர்கள் தேர்தலை புறக்கணித்தனர்.

இந்தத் தேர்தலைத் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி மதுரோ, ‘வெனிசுவேலாவின் நிர்வாகம் முற்றிலும் நம்பகரமானது’ என்றார்.

மேலும், ‘அரசியல் வரைபடத்திலிருந்து எதிர்க்கட்சிகள் காணாமல் போயுள்ளனதென்பதுடன், மேயர் தேர்தலை புறக்கணித்த கட்சிகள், இனி தேர்தலில்  போட்டியிட முடியாது’ எனவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை மோசமான பொருளாதார நெருக்கடி, அதிகரித்த பணவீக்கம், அடிப்படைப் பொருட்களின் பற்றாக்குறை ஆகிய பிரச்சினைகளுக்கு மத்தியிலும், ஜனாதிபதி மதுரோவின் ஆளும் சோசலிஷக் கட்சி மேயர் தேர்தலில் பாரிய வெற்றியைப் பெறுமென்று எதிர்பார்க்கப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg