Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிறுவர் இல்லத்திலிருந்து பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்களுக்கு சாதனையாளர் விருது!

In இலங்கை
Updated: 04:55 GMT, Dec 11, 2017 | Published: 04:55 GMT, Dec 11, 2017 |
0 Comments
1197
This post was written by : Anojkiyan

மட்டக்களப்பு-கல்லடி ஹரி சிறுவர் இல்லத்திலிருந்து 2017 கல்வியாண்டிற்கு பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்களிற்கான சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது.

சிறுவர் இல்லத்தின் தலைவர் எஸ். சந்திரகுமார் தலைமையில் நேற்று (ஞாயிற்றுக்கிழைம) சிறுவர் இல்ல மண்டபத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட மட்டக்களப்பு மாவட்ட புதிய அரசாங்க அதிபராகப் பதவியேற்ற மா.உதயகுமார், யாழ்ப்பாணம், பேராதனை மற்றும் கிழக்குப் பல்கலைக்குத் தெரிவான 4 மாணவர்களுக்கு நினைவுச் சின்னம் வழங்கிக் கௌரவித்தார்.

இந்நிகழ்வில் கல்லடி விவேகானந்தா மகளிர் மகா வித்தியாலய அதிபர் திலகவதி கரிதாஸ், கல்லடி சிவானந்த வித்தியாலய அதிபர் எஸ். துயாபரன், ஓய்வுபெற்ற ஆசிரியை இந்திராணி தாமோதரம், கல்லடி பேச்சியம்மன் ஆலயத் தலைவர் எஸ். ஹரிதாஸ், ஆகியோர் கலந்து கொண்டனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg