Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கடுமையான பனிப்பொழிவால் போக்குவரத்தில் பாதிப்பு

In
Published: 04:39 GMT, Dec 11, 2017 |
0 Comments
1241
icon_com
This post was written by : Suganthini

பிரித்தானியாவின் பல பகுதிகளிலும் கடுமையான பனிப்பொழிவு காணப்படுவதன் காரணமாக, போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ரயில் மற்றும் விமான சேவைப் போக்குவரத்துகளும் வீதிவழிப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், பெரும்பாலான பகுதிகளில் மின்விநியோகமும் தடைப்பட்டுள்ளதாக, அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரக்கன் (Brecon) பகுதிக்கு அருகிலுள் செனிபிரிஜுக்கு (Sennybridge) பகுதியில் 30 சென்ரிமீற்றர்வரை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பனிப்பொழிவு பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்கொட்லாந்து, வட அயர்லாந்திலும் பனிப்பொழிவு தொடர்ந்து காணப்படுமென்பதுடன், ஏனைய பகுதிகளில் இரவுவேளையில் கடும் குளிரான காலநிலை நிலவுமெனவும், அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கடுமையான பனிப்பொழிவால் பாதிக்கப்பட்டுள்ள இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆகிய பகுதிகளில் அவதானமாக இருக்கக் கூறி மஞ்சல் நிற எச்சரிக்கையை பிரித்தானியாவின் வானிலை நிலையம் விடுத்துள்ளது.

இதேவேளை, கடுமையான பனிப்பொழிவு காரணமாக மேற்படி பகுதிகளிலுள்ள நூற்றுக்கணக்கான பாடசாலைகள் இன்று (திங்கட்கிழமை) மூடப்பட்டுள்ளன.

ஹீத்ரோ விமான நிலையம் உட்பட பல விமான நிலையங்களில் விமானப் போக்குவரத்துச் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

கடும் பனிப்பொழிவு மற்றும் பலத்த காற்றுக் காரணமாக சுமார் 14 ஆயிரத்து 400 வீடுகளில் மின்விநியோகம் தடைப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg