Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வெளியுறவு அமைச்சர்களின் முத்தரப்பு சந்திப்பு ஆரம்பம்! (2ஆம் இணைப்பு)

In இந்தியா
Updated: 05:50 GMT, Dec 11, 2017 | Published: 05:50 GMT, Dec 11, 2017 |
0 Comments
1234
This post was written by : Kemasiya

இந்தியா, சீனா மற்றும் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர்களுக்கிடையிலான முத்தரப்பு சந்திப்பு, புதுடெல்லியில்  ஆரம்பமாகியுள்ளது.

இக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள ரஷ்ய வெளியுறவு அமைச்சர்  செர்ஜி வி.லாவ்ரோவ் (Sergey V. Lavrov) மற்றும் சீனா வெளியுறவு அமைச்சர் வாங் ஜி (Wang Yi) ஆகியோரை, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தனித் தனியாக சந்தித்து வரவேற்றுள்ளார்.

இதனையடுத்து ஆரம்பமாகியுள்ள முத்தரப்புச் சந்திப்பில், இந்தியாவுடனான வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு குறித்து அதிக கவனம் செலுத்தப்படும் என ரஷ்ய மற்றும் சீன அமைச்சர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அத்தோடு, பயங்கரவாதம் மற்றும் போதைப்பொருள் கடத்தல் போன்றவற்றை தடுப்பது குறித்தும் இப்பேச்சுவார்த்தையில் கவனஞ்செலுத்தப்படவுள்ளது.

 ரஷ்ய – சீன வெளியுறவு அமைச்சர்கள் ஒரே நாளில் இந்தியா விஜயம்!

ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள், ஒரே நாளில் இந்தியாவிற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளனர்.

இந்தியா, சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களுக்கிடையிலான முக்கோண கூட்டத்தொடரை முன்னிட்டு, நேற்று (ஞாயிற்றுக்கிழமை)  இரு நாட்டு அமைச்சர்களும் இந்தியாவின் தலைநகர் டெல்லியை வந்தடைந்தனர்.

ரஷ்ய வெளியுறவு அமைச்சர்  செர்ஜி வி.லாவ்ரோவ் (Sergey V. Lavrov)  மற்றும் சீனா வெளியுறவு அமைச்சர் வாங் ஜி (Wang Yi) ஆகியோர், இன்று இந்திய வெளியறவு அமைச்சர் சுஸ்மா சுவராஜூடன் முத்தரப்பு சந்திப்பில் கலந்துகொள்ளவுள்ளனர்.

fcdsf

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg