Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தமிழக மக்கள் மீது முதல்வருக்கு அக்கறையில்லை: இளங்கோவன்

In இந்தியா
Updated: 07:01 GMT, Dec 11, 2017 | Published: 07:01 GMT, Dec 11, 2017 |
0 Comments
1216
This post was written by : Kemasiya

தமிழக மக்கள் மீது முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு, துளியளவும் அக்கறையில்லை என தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

ஈரோட்டில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின்னர், ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,

“வெள்ளம் மற்றும் புயல் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்வையிடவோ, அல்லது அவர்களுக்கு உதவிகளை வழங்கவோ முதலமைச்சர் முன்வராமல், ஊர் ஊராகச் சென்று எம்.ஜி.ஆர். விழா கொண்டாடுகிறார். இதுவா ஒரு மக்கள் தலைவர் செய்யும் பணி?

மேலும், புயலால் அதிகம் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரியை, பேரிடர் மாநிலமாக அறிவிக்க வேண்டும். அதற்காக கேரளா முதல்வர் டெல்லி சென்று, பிரதமரை சந்தித்து பேசினார். ஆனால் நமது முதல்வர் அதுபற்றி கேட்டாரா? முதல்வருக்கு தமிழக மக்கள் மீது சிறிதும் அக்கறை இல்லை” என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg