Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சமாதான முயற்சிக்கு சமிக்ஞை காட்ட பிரான்ஸ் வலியுறுத்து

In ஐரோப்பா
Updated: 08:07 GMT, Dec 11, 2017 | Published: 08:07 GMT, Dec 11, 2017 |
0 Comments
1138
This post was written by : Suganthini

சமாதான முயற்சியை முன்னெடுப்பதற்கான சமிக்ஞையை பலஸ்தீனத்துக்கு இஸ்ரேல் காட்ட வேண்டுமென்று, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் வலியுறுத்தியுள்ளார்.

பிரான்ஸுக்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) விஜயம் செய்துள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு, பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோனை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இதன் பின்னர், பரிஸில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே, அவர்  இந்த  வலியுறுத்தலை விடுத்துள்ளார்.

இந்தச் சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்தபோது, ‘இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அங்கீகரித்தமையை நாம் ஏற்கவில்லையென்பதுடன், ட்ரம்ப்பின் இந்த அறிவிப்பானது சர்வதேச சட்டத்துக்கு முரணாகக் காணப்படுகின்றது. எனவே, சமாதான நடவடிக்கைக்கும் இது பாரிய ஆபத்தாக அமையும்’ என்றார்.

மேலும், ‘இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனம் ஆகிய நாடுகள் சமாதானமாக இருக்கவே பிரான்ஸ் விரும்புகின்றது. இது தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாஹுவுக்கு நான் தெளிவுபடுத்தியுள்ளேன். இந்நிலையில், பலஸ்தீனத்துடன் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பை இஸ்ரேல்  வழங்க வேண்டுமெனவும் இஸ்ரேல் பிரதமருக்கு வலியுறுத்தியுள்ளேன்” எனவும் அவர் கூறியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg