Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மிரட்டல்களுக்கு அஞ்ச மாட்டேன்: தினகரன்

In இந்தியா
Updated: 09:58 GMT, Dec 11, 2017 | Published: 09:16 GMT, Dec 11, 2017 |
0 Comments
1862
This post was written by : Kemasiya

பொலிஸாரை அனுப்பி எமது கட்சி தொண்டர்களை கைது செய்வது மற்றும் மிரட்டுவது போன்ற செயல்களுக்கெல்லாம் நான் அஞ்சமாட்டேன் என டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று (திங்கட்கிழமை) ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து தெரிவித்த போதே, தினகரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த தினகரன்,

“நேற்று இடம்பெற்ற ஆர்.கே.நகர் தேர்தல் பிரசாரத்தில், எனது ஆதரவாளர்களை பொலிஸார் காரணமின்றி கைது சைய்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட சிலரை பொலிஸார் எங்கு வைத்துள்ளனர், எந்த பொலிஸார் கைது செய்தனர் என்று எதுவும் தெரியாது .

பொலிஸார் உரிய முறையில் செயற்படவில்லையென்றால், நான் ஏற்கனவே கூறியதை போன்று நீதிமன்றில் மேன் முறையீடு செய்வேன்.

மேலும் குறித்த விடயம் தொடர்பில், தலைமை தேர்தல் அதிகாரி லக்கானியிடம் புகார் அளித்துள்ளேன்” என குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg