Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முதியவரை காக்கச் சென்ற இளைஞர் மரணம்!

In கனடா
Updated: 12:29 GMT, Dec 17, 2017 | Published: 09:17 GMT, Dec 17, 2017 |
0 Comments
1215
This post was written by : Puvanes
canada04

கனடா – ஹமில்டன் பகுதியில் முதியவர் ஒருவரைக் காப்பாற்ற சென்ற 19 வயது இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

அண்மையில், குறித்த பகுதியில் முதியவர் ஒருவர்மீது இளைஞர்கள் இருவர் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர். இதன்போது அருகில் நின்ற யோசிப் அல் ஹஸ்னாவி என்ற இளைஞன், தாக்குதலின் இடைநடுவில் புகுந்து முதியவரைக் காப்பாற்ற முனைந்துள்ளார்.

குறித்த இளைஞனின் செயற்பாட்டால் ஆத்திரடைந்த சந்தேகநபர்கள் துப்பாக்கியால் குறித்த இளைஞனை சுட்டுள்ளனர். இதனால் சம்பவ இடத்திலேயே யோசிப் அல் மரணமடைந்துள்ளார்.

இந்தச் சம்பவமானது குறித்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதோடு, ஏராளமான மக்கள் ஒன்று திரண்டு மரணமடைந்த இளைஞருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

மேலும், யோசிப் அல்லின் மரணத்திற்கு நீதி வழங்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளதோடு, மரணமடைந்த இளைஞரின் குடும்பத்திற்கு நன்கொடை வழங்கும் செயற்பாடுகளிலும் பொதுமக்கள் ஈடுபட்டுள்ளனர்.

சம்பவத்தில் துப்பாக்கிச் சூடு மேற்கொண்ட இருவரை பொலிஸார் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg