Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ராகுலின் தலைமை இந்தியாவில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது: தமிழிசை

In இந்தியா
Updated: 12:29 GMT, Dec 11, 2017 | Published: 11:30 GMT, Dec 11, 2017 |
0 Comments
1398
This post was written by : Kemasiya

காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல்காந்தி தெரிவாகியுள்ளமை, மக்களிடையே எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை என பா.ஜ.க.வின் தமிழகத் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.

இன்று (திங்கட்கிழமை) காங்கிரஸின் தலைவராக ராகுல்காந்தி தெரிவாகியுள்ளமையை தொடர்ந்து, ஊடகமொன்றிற்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த செவ்வியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது-

“காங்கிரஸ் கட்சியில், ராகுல்காந்தி தலைவராக தெரிவாகியுள்ளமை அவர்களின் தனிப்பட்ட பிரச்சினை. ஆனால் அது தமிழகத்திலோ அல்லது அகில இந்தியாவிலோ, எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது.

ஏனெனில் ஒரே குடும்பத்தை சார்ந்தவரே, மறுபடியும் ஒரு கட்சிக்கு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இது மறுடியும் காங்கிரஸின் குடும்ப ஆட்சியை மக்களுக்கு வலியுறுத்துகிறது.

எத்தனையோ மூத்த தலைவர்கள் இருந்தும், அவர்களும் ராகுலை தேர்ந்தெடுக்கக்கூடிய கட்டாயத்திற்குள் வருகிறார்கள் என்றால், இது தான் காங்கிரஸின் ஆட்சி.

இதனால் பாரத தேசத்திற்கு எதுவும் ஏற்படப்போவதில்லை. ஏனெனில் இவர்களின் ஆட்சி இந்த தேசத்தில் நீண்ட காலமாக இருந்து நாட்டை எந்த முன்னேற்றத்திற்கும் எடுத்துச் செல்லவில்லை. ஊழலைதான் அதிகம் வளர்த்து வைத்திருந்தார்கள்.

இவர் புதிய தலைமை என்று சொல்ல முடியாது. இதே ராகுல் தான், அக்கட்சியில் துணைத்தலைவராக இருந்துள்ளார். பாராளுமன்றத்திலும் இருந்துள்ளார். ஆனால் இதுவரையில் எந்த மாற்றத்தையும், எந்த புதுமையையும் இந்த தேசத்திற்கு செய்யவில்லை.

எனவே இந்த தலைவர் நியமிப்பானது, அவர்களின் குடும்பத்திற்கு கொண்டாட்டமே தவிர, நாட்டிற்கு அல்ல” எனக் குறிப்பிட்டுள்ளார்.

fhgdh

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg