Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

150 கிலோ மரை இறைச்சியுடன் ஒருவர் கைது

In இலங்கை
Published: 14:15 GMT, Dec 11, 2017 |
0 Comments
1842
This post was written by : Varothayan
photo (2)

நுவரெலியா பொரலந்த பகுதியில் 150 கிலோ மரை இறைச்சியை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட நபருக்கு 50 ஆயிரம் ரூபாய் தண்டம் செலுத்துமாறு நுவரெலியா நீதிமன்ற நீதவான் ருவான் இந்திக்க டீ சில்வா உத்தரவிட்டார்.

இவ்வாறு தண்டம் விதிக்கப்பட்டவர் நுவரெலியா பொரலந்த பீட்ரூ பகுதியைச் சேர்ந்த சுப்பையா கணேஷ் (46 வயது) எனவும் தெரியவருகின்றது.

மரை இறைச்சி விற்பனை செய்து வருவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து விரைந்த பொலிஸார் 150 கிலோகிராம் இறைச்சியை மீட்டுள்ளதுடன் சந்தேக நபரையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை இன்று (திங்கட்கிழமை) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போதே இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும் தெரியவருகின்றது.

photo (3) photo (6)

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg