Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கைக்கு கடத்த இருந்த கேரளா கஞ்சா பறிமுதல் – ஒருவர் கைது

In இந்தியா
Published: 14:41 GMT, Dec 11, 2017 |
0 Comments
1105
This post was written by : Varothayan

இலங்கைக்கு கடத்த இருந்த 75 லட்சம் ரூபாய் மதிப்பிலான கேரள கஞ்சாவை இன்று (திங்கட்கிழமை) பறிமுதல் செய்த இராமேஸ்வரம் பொலிஸார் ஒருவரைக் கைது செய்துள்ளதுடன் முக்கிய கடத்தல்காரரை தேடிவருகின்றனர்.

மன்னார் வளைகுடா கடல் வழியாக இலங்கைக்கு கள்ளத் தோணியில் கேரளா கஞ்சா கடத்த இருப்பதாக பொலிஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து ராமேஸ்வரம் பாம்பன் மண்டபம் உள்ளிட்ட கடலோரப்குதிகளில் மாவட்ட சிறப்பு பிரிவு காவல்துறை மற்றும் கியூபிரிவு போலீஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது மண்டபம் அருகே பிரப்பன்வலசை கடற்கரைப்பகுதியை நோக்கி வேகமாக வந்த காரை நிறுத்த பொலிஸார் சமிக்ஞை கொடுத்தனர். ஆனால் கார் நிற்காமல் சென்றதையடுத்து விரட்டி சென்ற பொலிஸார் காரை மடக்கி பிடித்து மண்டபம் காவல்நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

பறிமுதல் செய்யப்பட்ட காரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 75 லட்சம் ரூபாய் மதிப்பிலான 85 பார்சலில் இருந்த 165 கிலோ கேரள கஞ்சாவை பறிமுதல் செய்த பொலிஸார், தொண்டி பகுதியைச் சேர்ந்த நபரையும் கைது செய்து முக்கிய கடத்தல்காரர் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg