Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

க.பொ.த. சாதாரணதரப் பரீட்சை நாளை ஆரம்பம்

In இலங்கை
Published: 15:03 GMT, Dec 11, 2017 |
0 Comments
1145
This post was written by : Varothayan
exam

2017 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சை நாளை (செவ்வாய்க்கிழமை) ஆரம்பமாகவுள்ளது. இதனையொட்டி, பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இம்முறை நடைபெறவுள்ள சாதாரணதரப் பரீட்சை ஐந்தாயிரத்து 116 மத்திய நிலையங்களில் நடைபெறவுள்ளது. ஆறு லட்சத்து 88 ஆயிரத்து 573 பரீச்சாத்திகள் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர்.

இன்று காலை கல்வி அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியளாலர்கள் சந்திப்பின் போது கருத்து தெரிவித்த கல்வி அமைச்சர், பரீட்சை வெற்றிகரமாக இடம்பெறுவதற்கு தற்போது அனைத்து ஏற்பாடுகளையும் பரீட்சைகள் திணைக்களம் செய்துள்ளது.

இதேபோன்று பொதுப் பரீட்சைகள் சட்டவிதிகளுக்கு அமைவாக அனைத்து பரீட்சாத்திகளும் செயற்படவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

ரயில் போக்குவரத்து பிரச்சனை ஏற்படுமாயின் குறித்த நேரத்திற்கு முன்பதாக பரீட்சை மத்திய நிலையங்களுக்கு தமது பிள்ளைகளை அனுப்ப பெற்றோர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அமைச்சர் கேட்டுகொண்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg