Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

10 லட்சம் தொழில்வாய்ப்புக்கள்: சபையில் கூறினார் மலிக் சமரவிக்கிரம

In இலங்கை
Updated: 15:40 GMT, Dec 11, 2017 | Published: 15:37 GMT, Dec 11, 2017 |
0 Comments
1191
This post was written by : Varothayan

இலங்கை தொழிற்துறையை அடிப்படையாக கொண்ட பொருளாதாரத்தை நோக்கி பயணிப்பதாக அபிவிருத்தி மூலலோபாய மற்றும் சர்வதேச வர்த்தகத்துறை அமைச்சர் மலிக் சமரவிக்கிரம தெரிவித்துள்ளார்.

இறக்குமதி மற்றும் ஏற்றுமதி சட்டத்தின் கீழான கட்டளைகள் இரண்டு தொடர்பான விவாதம் இன்று (திங்கட்கிழமை) நாடாளுமன்றில் ஆரம்பமானது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, மலிக் சமரவிக்கிரம இதனைத் தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர், இலங்கை தொழிற்துறை அடிப்படையிலான பொருளாதாரத்தை நோக்கி பயணிக்கின்றது. இதன் கீழ் 10 லட்சம் தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்த நாம் எதிர்பார்த்துள்ளோம். இதற்காக சர்வதேச வர்த்தகத்தில் நாம் ஈடுபட வேண்டும்.

தற்போது இதற்கு சிறந்த சூழ்நிலை நிலவுவதுடன் சிறந்த வர்த்தகத்திற்கு சாதகமான நிலையும் உண்டு. நாம் வரி சலுகையை வழங்க எதிர்பாத்துளோம். 208 பொருட்களுக்கு வரியை குறைத்துள்ளோம். சுதந்திர வர்த்தக உடன்படிக்கையின் கீழ் புதிதாக பெறுமதி சேர்க்கப்படுகின்றது.

எமது நாட்டின்; கைத்தொழில் துறையை நாம் மறக்கவில்லை. எமது நாட்டின் கைத்தொழில் துறை எதிர்கொண்டுள்ள நிலையில் இருந்து பாதுகாப்பதற்காக நிவாரணம் வழங்கப்பட்டு வருகின்றது.

இலங்கை வர்த்தக உடன்படிக்கைகளை மேற்கொண்டுள்ளது. சிறந்த சட்டங்களை இலங்கையில் முன்னெடுக்க வேண்டும். சட்ட விடயத்திலும் உடன்படிக்கை தொடர்பான சட்ட நிவாரணமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த குறிப்பிட்ட இரண்டு கட்டளைகள் தொடர்பான முக்கியத்துவத்தை நான் இங்க குறிப்பிட விரும்புகின்றேன்.

சிறப்பற்ற வர்த்தக போட்டியின் போது இவ்வாறான கட்டுபாட்டை மேற்கொள்வது அவசியமாகும். இது இலங்கை தொழிற்துறையை பாதுகாப்பதற்கு ஊகந்ததாகும். கைத்தொழில் துறை மீது ஏற்படும் அழுத்தத்திற்கு இது சிறந்த நடைமுறையாகும்- என்றார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg