Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நுவரெலியா மாநகர சபையுடன் மீண்டும் லவர்சிலிப் தோட்டத்தை உள்வாங்கக் கோரி ஆர்ப்பாட்டம்

In இலங்கை
Updated: 15:56 GMT, Dec 11, 2017 | Published: 15:52 GMT, Dec 11, 2017 |
0 Comments
1079
This post was written by : Varothayan
photo (4)

நுவரெலியா மாநகர சபையுடன் மீண்டும் லவர்சிலிப் தோட்டத்தை உள்வாங்க வேண்டும் என கோரி அத்தோட்ட மக்கள் இன்று (திங்கட்கிழமை) ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். இந்த ஆர்ப்பாட்டமானது நுவரெலியா பொரலந்த நகரத்தில் இடம்பெற்றது. இதன் போது, பதாதைகளை ஏந்தி, கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் சுமார் ஒரு மணி நேரமாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உள்ளுராட்சி மன்றங்களுக்கான எல்லை பிரிப்பு விடயத்தில் நுவரெலியா மாநகர சபைக்கு உட்பட்ட பகுதியாக இருந்த லவர்சிலிப் சின்னகாடு தோட்டத்தை பிரதேச சபை எல்லைப்பகுதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் இங்கு மாநகர சபைக்கு சேர்ந்து இருக்கப்பட வேண்டிய தமிழ் பிரதிநிதித்துவம் இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளது.

இதனால், நுவரெலியா மாநகர சபையில் நேரடியாக சலுகைகளை பெற்று வந்த சுமார் 1000 வாக்களர்கள் நுவரெலியா பிரதேச சபைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், தாங்களை மாத்திரம் மாற்றுவதன் மூலம் தங்களது அடிப்படை விடயங்களை பெற்றுக் கொள்வதில் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுவதாக இவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

photo (1) photo (2) (1) photo (3) (1)

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg