Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உமாமகேஸ்வரன் முன்பள்ளியின் கலைவிழாவும் மாணவர் கௌரவிப்பும்!

In இலங்கை
Updated: 16:03 GMT, Dec 11, 2017 | Published: 16:03 GMT, Dec 11, 2017 |
0 Comments
1136
This post was written by : Varothayan

வவுனியா திருநாவற்குளம் உமாமகேஸ்வரன் முன்பள்ளியின் வருடாந்த கலைவிழா மற்றும் மாணவர் கௌரவிப்பு ஆகியன இன்று (திங்கட்கிழமை) காலை 9:30 மணியளவில் இடம்பெற்றது.

இந்நிகழ்வானது முன்பள்ளி ஆசிரியை திருமதி. மீராகுணசீலன் அவர்களின் தலையமையில் இடம்பெற்றது. பிரதம விருந்தினராக வடமாகாண சபையின் உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் அவர்கள் கலந்து சிறப்பித்து மாணவர்களுக்கு பரிசில்களையும் வழங்கி வைத்தார்.

மேலும் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் உப நகர பிதா திரு.க.சந்திரகுலசிங்கம், முன்பள்ளி வடக்கு வலயம் திரு.ராஜேஸ்வரன், கோட்ட இணைப்பாளர் வவுனியா ம.அருள்வேல்நாயகி, பிரதி கல்விப்பணிப்பாளர் திரு.ரகுபதி, மாவட்ட இளைஞர் கழக தலைவர் காண்டீபன், முன்பள்ளியின் ஆசிரியர்கள், மாணவர்கள் பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

unnamed (1) unnamed (2) unnamed

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg