Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

த.தே.கூட்டமைப்பை ஆதரிக்கிறது அகில இலங்கை மக்கள் ஜனநாயகக்கட்சி

In இலங்கை
Updated: 16:41 GMT, Dec 11, 2017 | Published: 16:40 GMT, Dec 11, 2017 |
0 Comments
1309
This post was written by : Varothayan
IMG_0955

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் அகில இலங்கை மக்கள் ஜனநாயகக்கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஆதரவு வழங்கவுள்ளதாக அக்கட்சியின் தலைவர் எஸ்.லோகநாதன் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சித் தேர்தலில் எந்தக் கட்சிக்கு ஆதரவு கொடுப்பது என்பது தொடர்பாக அகில இலங்கை மக்கள் ஜனநாயகக்கட்சியின் உயர் மட்ட அரசியல் அதியுயர்பீடக்ககூட்டம் இன்று கல்முனை சணச சமாச மண்டபத்தில் கட்சியின் தலைவர் எஸ்.லோகநாதன் தலைமையில் கூடியது. இக்கூட்டத்திற்கு கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

அங்கு பேசிய லோகநாதன், எமது கட்சியின் நோக்கு இணைந்த வடகிழக்கில் தமிழ் மக்களுக்கான சுயநிர்ணய உரிமையுடன் கூடிய நிரந்தரத்தீர்வு கிடைக்க வேண்டும் என்பதே! அதற்காக நாங்கள் பன்னெடும்காலமாக பலமட்டங்களில் போராடி வருகின்றோம்.

குறிப்பாக உயிர் அச்சுறுத்தல் இருந்த காலத்திலும் எந்தவிதமான சுயநோக்கமும் இன்றி எமது மக்களுக்காக குரல் கொடுத்து வருகின்றோம். இந்த செயற்பாடு இனிமேலும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.

அன்று இணைந்திருந்த வடகிழக்கினை முன்பு அமைச்சராக இருந்த அதாவுல்லா இரண்டாக பிரித்ததன் பின்னர் கிழக்கு மாகாணத்தில் திட்டமிட்ட குடியேற்றங்கள் ஆங்காங்கே இடம்பெற்று வருகின்றன.

அதிலும் குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் தமிழர்கள் பூர்வீகமாக வாழ்ந்து வந்த பல இடங்கள் பெரும்பான்மை இனத்தவர்களாலும், எமது சகோதர இனமான முஸ்லிங்களாலும் நன்கு திட்டமிட்ட முறையில் நில அபகரிப்பு தொடர்ந்த வண்ணம் உள்ளது.

இவ்வாறான திட்டமிட்ட நில அபகரிப்பு காரணமாக தமிழர்கள் எதிர்காலத்தில் அம்பாறை மாவட்டத்தில் தமது இருப்பினை தக்கவைத்துக்கொள்வார்களா என்ற கேள்வி அனைத்து தமிழர்கள் தரப்பிலும் எழுகின்றது.

குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் தமிழர்கள் பூர்வீகமாக வாழ்ந்து வந்த பலவெளி கிராமம் இன்று பெரும்பான்மை இனத்தவர்களின் அபகரிப்பால் சூரையாடப்பட்டிருக்கின்றது. அதேபோன்று திராய்க்கேணி, அட்டப்பள்ளம், மாணிக்கமடு போன்ற இடங்களில் முஸ்லிங்களின் ஆக்கிரமிப்பு அதிகமாக உள்ளது. இவ்வாறான நில அபகரிப்பினை தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு கண்டும் காணாமலும் இருப்பதன் நோக்கம் என்னவென்று புரியவில்லை.

தேர்தல் காலங்களில் மக்களை நாடி வரும் அரசியல்வாதிகள் தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டால் மக்களை மறந்து விடுவதுதான் வழமை. அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எமது மக்களின் குறைகள் பற்றி பாராளுமன்றத்தில் எடுத்துக்கூறுகின்றார். அதனை நாங்கள் வரவேற்கின்றோம்.

அவர் மாத்திரம் எமது பிரச்சனையை முன்வைத்தால் மாத்திரம் போதாது த.தே.கூட்டமைப்பின் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களும் அம்பாறை மாவட்டம் தொடர்பாக அக்கறை காட்ட வேண்டும் – என்றார்.

கூட்டத்தின் இறுதியில் சில தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

IMG_0956 IMG_0958

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg