Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

எட்டு தலைமுறைகளாக ஆண்ட மண்ணை விடுவியுங்கள்: கேப்பாப்புலவு மக்கள்

In இலங்கை
Updated: 04:39 GMT, Dec 12, 2017 | Published: 04:39 GMT, Dec 12, 2017 |
0 Comments
1344
This post was written by : Varshini

சுமார் எட்டு தலைமுறைகளாக வாழ்ந்த தமது தாயக மண்ணை விடுவித்து, தமது பிள்ளைகளின் எதிர்காலத்திற்கு வழிகாட்ட வேண்டுமென கேப்பாப்புலவு  மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராணுவத்தின் பிடியில் இருக்கும் முல்லைத்தீவு கேப்பாப்புலவு பூர்வீக கிராமங்களை விடுவிக்குமாறு கோரி, கடந்த 286 நாட்களாக போராட்டம் இடம்பெற்று வருகின்றது. மழையையும் வெயிலையும் பொருட்படுத்தாது, குழந்தைகள் முதல் வயோதிபர்கள் வரை, 138 குடும்பங்கள் இவ்வாறு கொட்டில் அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அரசாங்கத்திற்கோ ராணுவத்திற்கோ எதிராக தாம் போராடவில்லையென்றும், தமது தாயக மண்ணுக்காகவே போராடுகின்றோம் என்றும் தெரிவிக்கும் இம்மக்கள், ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பாடசாலைகள் மற்றும் கோயில்கள் என சகல இடங்களும் விடுவிக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

அத்தோடு, தமது சொந்த மண்ணில் தமது பிள்ளைகளுக்கு கல்வி போதிக்க வேண்டும் என்றும் அவர்களின் எதிர்காலம் வீணாகிப் போய்விடக் கூடாதென்றும் இம்மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதேவேளை, இம்மக்களின் காணிகளை இம்மாத இறுதிக்குள் விடுவிப்பதாக மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் உறுதியளித்துள்ளார். ஏற்கனவே இவ்வாறு வழங்கப்பட்ட பல உறுதிமொழிகள் ஏமாற்றத்தை தந்தநிலையில், இம்முறையேனும் தமது காணிகள் விடுவிக்கப்பட்டு, தமது சொந்த நிலத்தில் வாழும் நிலை ஏற்படவேண்டுமென இம்மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg