Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

குஜராத்தின் இரண்டாம் கட்ட தேர்தல்: பிரசாரப் பணிகள் நிறைவு!

In இந்தியா
Updated: 06:19 GMT, Dec 12, 2017 | Published: 05:42 GMT, Dec 12, 2017 |
0 Comments
1161
This post was written by : Kemasiya

குஜராத்தின் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரசாரக் காலம், இன்றுடன் நிறைவடைகின்றதாக தேர்தல்கள் ஆணையகம் தெரிவித்துள்ளது.

இன்று (செவ்வாய்கிழமை) செய்தியாளர்களுக்கு வழங்கிய தகவலின் பிரகாரமே, ஆணையக அதிகாரிகள் மேற்படி தெரிவித்துள்ளனர்.

182 தொகுதிகளை கொண்ட குஜராத்திற்கான முதல்கட்ட தேர்தல், கடந்த 9 ஆம் திகதி இடம்பெற்றது. அதனை தொடர்ந்து 2 ஆம் கட்ட தேர்தல், எதிர்வரும் 14 ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில், குறித்த தேர்தலுக்கான பிரசாரங்களை, பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இன்றுடன் நிறுத்திக் கொள்கின்றன.

எதிர்வரும் 18 ஆம் திகதி வாக்குகளை எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக, தேர்தல்கள் ஆணையகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg