Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பன்முக வர்த்தகத்திட்டத்தை முன்னெடுக்க சீனா வலியுறுத்து

In
Updated: 06:24 GMT, Dec 12, 2017 | Published: 06:24 GMT, Dec 12, 2017 |
0 Comments
1163
This post was written by : Suganthini

பன்முக வர்த்தகத்;திட்டம் மற்றும் பொருளாதாரப் பூகோளமயமாதலுக்கு நிலையான ஆதரவை சீனா எப்பொழுதும் வழங்கி வருவதாக, சீனாவின் வர்த்தக அமைச்சர் ஹாங் ஷான் (Zhong Shan) தெரிவித்துள்ளார்.

உலக வர்த்தக அமைப்பின் 11ஆவது மாநாடு, ஆர்ஜென்டினாவில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்தபோது, ‘உலகளாவிய ரீதியிலான பொருளாதார வளர்ச்சிக்கு, பொருளாதாரப் பூகோளமயமாக்கல் மிக முக்கியமான உந்துசக்தியாகுமென்பதுடன், அபிவிருத்திச் செயற்பாடுகள் மற்றும்  வளர்ச்சிக்கு பன்முக வர்த்தகத்திட்டம் மிகவும் பாதுகாப்பானதொன்றாகும்’ என்றார்.

‘எனவே, உலக வர்த்தக அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்களுடன் இணைந்து ஒத்துழைக்க சீனா தயாராகவுள்ளதென்பதுடன், இவ்வமைப்புக்கு சீனா தனது ஆதரவை வழங்கும்’ எனவும் அவர் கூறியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg