ரஷ்யப் படையினரைத் திருப்பியழைக்கும் நடவடிக்கை ஆரம்பம்

சிரியாவில் நிலைகொண்டுள்ள ரஷ்யப் படையினரைத் திருப்பியழைக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் Sergei Shoigu தெரிவித்துள்ளார்.
சிரியாவுக்கு நேற்று (திங்கட்கிழமை) விஜயம் செய்த ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், சிரியாவிலுள்ள ரஷ்யப் படையினரை படிப்படியாகத் திருப்பியழைப்பதற்கான நடவடிக்கை எடுக்குமாறு பாதுகாப்பு அமைச்சருக்கு உத்தரவிட்டார்.
இதனையடுத்தே, சிரியாவிலுள்ள ரஷ்யப் படையினரைத் திருப்பியழைக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், படிப்படியாக இந்த நடவடிக்கை இடம்பெறுமெனவும், அவர் கூறியுள்ளார்.
சிரியாவில் இடம்பெற்ற மோதலுக்கு, சிரியப் படையினருக்கு ஆதரவாக ரஷ்யப் படையினர் செயற்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.