Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பக்கிங்ஹாம் அரண்மணைக்குள் நுழைய முற்பட்டவர் கைது

In
Updated: 06:50 GMT, Dec 12, 2017 | Published: 06:50 GMT, Dec 12, 2017 |
0 Comments
1217
This post was written by : Suganthini

பிரித்தானியா, பக்கிங்ஹாம் அரண்மணைக்குள் நுழைய முற்பட்ட குற்றச்சாட்டின் பேரில் 24 வயதுடைய ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

அரண்மனைக்குள் நுழையும் நோக்கில் நேற்றுமுன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) மாலை நுழைவாயிற்கதவில் இச்சந்தேக நபர் ஏற முற்பட்டுள்ளார். இதனை அவதானித்த பொலிஸார் சந்தேக நபரைக் கைதுசெய்துள்ளனர்.

இச்சந்தேக நபர் ஆயுதம் எதனையும் வைத்திருக்கவில்லையென்பதுடன், இது பயங்கரவாதச் சம்பவத்துடன் தொடர்புடையதில்லையெனவும், பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையையடுத்து, அவர் நிபந்தனை அடிப்படையில் பிணையில் விடுவிக்கப்பட்டதாகவும், பொலிஸார் கூறியுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg