Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கச்சதீவை மீட்பதே மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு: ஜெயக்குமார்!

In இந்தியா
Updated: 09:47 GMT, Dec 12, 2017 | Published: 09:47 GMT, Dec 12, 2017 |
0 Comments
1168
This post was written by : Kemasiya

கச்சதீவை மீட்பதே மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வாகும் என, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

சென்னையில் இன்று (செவ்வாய்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார், தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு வருவது தொடர்கதையாக உள்ளதே? என்னும், செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் வழங்கிய போது  மேற்படி தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,

“கச்சதீவு என்பது இந்தியாவின் ஒரு பகுதி. எனவே அது மீட்கப்பட வேண்டும் என்பதில் நாம் உறுதியாக உள்ளோம். அந்த அடிப்படையில் அம்மா அவர்கள் தொடர்ந்தும் போர்க்குரல் எழுப்பி, உயர் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

எனவே கச்சதீவை மீட்பதே மீனவர்கள் பிரச்சினைக்கு கிடைக்கும் நிரந்தர தீர்வாகும்” என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg