Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மகளுக்காக மரத்தின்மீது ஏறி தந்தை போராட்டம்

In இலங்கை
Published: 10:05 GMT, Dec 12, 2017 |
0 Comments
1858
This post was written by : Varshini

தனது மகளுக்காக சுமார் 10 அடி உயரமான மரத்தின் மீது ஏறி தந்தையொருவர் போராட்டம் நடத்திய சம்பவம், பொலனறுவை மைத்திரி கிராமத்தில் இடம்பெற்றுள்ளது.

மனைவியை விட்டு பிரிந்து வாழும் குறித்த தந்தை, தனது 9 வயதான மகளை தன்னிடம் ஒப்படைக்க வேண்டுமெனக் கோரி இன்று (செவ்வாய்க்கிழமை) காலை இவ்வாறு போராட்டம் நடத்தியுள்ளார்.

தாய் இல்லாத நிலையில், குறித்த பெண் பிள்ளையை அவரது சகோதரரின் மனைவியின் பாதுகாப்பில் ஒப்படைக்குமாறு நேற்று பொலனறுவை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், தனது மகளை மீண்டும் தன்னிடம் ஒப்படைக்க வேண்டுமென தந்தை கோரியுள்ளார். இதனைத் தொடர்ந்து அவரை சமரசப்படுத்தி மரத்திலிருந்து இறங்க வைத்த பொலிஸார், பொலனறுவை நீதவான் நீதிமன்றில் இன்று பிற்பகல் ஆஜர்படுத்தியுள்ளனர்.

இதன்போது, தந்தையின் கோரிக்கையை செவிமடுத்த நீதவான், மகளைப் பார்வையிடுவதற்கான அனுமதியை வழங்கி அவரை விடுவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg