Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நான் கால்பந்தின் கடவுள் அல்லன்: மரடோனா

In உதைப்பந்தாட்டம்
Updated: 11:31 GMT, Dec 12, 2017 | Published: 10:28 GMT, Dec 12, 2017 |
0 Comments
1238
This post was written by : Elakkiya

உலகெங்கிலும் மில்லியன் கணக்கான மக்கள் மத்தியில் மிகச்சிறந்த கால்பந்து வீரராகவும் கால்பந்தின் கடவுளாகவும் கருதப்படும் ஆர்ஜென்டீனாவின் முன்னாள் கால்பந்து வீரர் டியாகோ மரடோனா இத்தகைய உயர்மதிப்பீடுகளுக்கு தான் உகந்தவனல்லன் என்று தெரிவித்துள்ளார்.

கொல்கத்தாவுக்கு மூன்றுநாள் விஜயமாக சென்றிருந்த மரடோனா நேற்று (திங்கட்கிழமை) பொது நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது, “கால்பந்தின் கடவுள் என்று என்னை நான் நினைக்கவில்லை. நான் சாதாரண கால்பந்தாட்ட வீரராகவே கருதுகின்றேன்” என்று தெரிவித்துள்ளார்.

மரடோனா கொல்கத்தா விஜயம் செய்வது இரண்டாவது முறையாகும். முன்னதாக கடந்த 2008 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதன்முறையாக கொல்கத்தா விஜயம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

1986 ஆம் ஆண்டு உலகக்கிண்ணத்தை ஆர்ஜென்டீன அணிக்கு வென்று கொடுத்த மரடோனா தனது அபார ஆட்டத்தினால் இன்றும் மக்களின் மனங்களில் நிலைத்துள்ளார் என்பதில் ஐயமில்லை.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg