Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வடகொரியாவுடன் வர்த்தகத்தில் ஈடுபடவில்லை – தாய்லாந்து

In உலகம்
Updated: 11:16 GMT, Dec 12, 2017 | Published: 11:14 GMT, Dec 12, 2017 |
0 Comments
1120
This post was written by : Suganthini
thai

வடகொரியாவுக்கும் தாய்லாந்துக்குமிடையில் எந்தவித வர்த்தக நடவடிக்கையும் இடம்பெறவில்லையென, தாய்லாந்துப் பிரதமர் பிரயுத் சான் ஓச்சா (Prayuth Chan-ocha) தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே,  மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்தபோது, ‘வடகொரியாவுக்கும் எமது நாட்டுக்குமிடையில் எந்தவித வர்த்தக நடவடிக்கையும் இடம்பெறவில்லையென்பதுடன், வடகொரியா மீது விதிக்கப்பட்டுள்ள ஐ.நா.வின் தீர்மானங்களை நாம் பின்பற்றி நடக்கின்றோம்’ என்றார்.

இதேவேளை, வடகொரியாவின் ஏவுகணை மற்றும் அணுவாயுதச் சோதனைக்கு மத்தியில், அந்நாட்டுக்கு எதிராக கூடிய அழுத்தம் பிரயோகிப்பது தொடர்பாகக் கலந்துரையாடும் நோக்கில், வடகொரியாவுக்கான அமெரிக்காவின் விசேட பிரதிநிதி ஜோஸப் யுன், தாய்லாந்துக்கு இந்த வாரம் விஜயம் செய்ய எதிர்பார்த்துள்ளார்.

வடகொரியா ஏவுகணை மற்றும் அணுவாயுதத்திறன்களை வளர்த்துவரும் சூழ்நிலையில், அந்நாட்டுக்கு நிதியுதவி அளிப்பதை நிறுத்துமாறு தெற்காசிய நாடுகளுக்கு, அமெரிக்கா வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg