Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கியூபெக்கில் அடிப்படை ஊதியத்தை ஊக்கத் தொகையாக வழங்க முடிவு

In கனடா
Updated: 12:11 GMT, Dec 12, 2017 | Published: 12:10 GMT, Dec 12, 2017 |
0 Comments
1078
This post was written by : Elakkiya

கியூபெக்கில் வறுமை ஒழிப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு முதல் மக்களின் அடிப்படை ஊதியத்தை ஊக்கத் தொகையாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ள கியூபெக் மாகாண முதலமைச்சர் 3 பில்லியன் டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கியூபெக் மாகாண அரசின் மேற்படி திட்டத்தின் பிரகாரம் மாகாணத்திலுள்ள சுமார் 84 ஆயிரம் பேர் பயனடைவர் என்றும் குறிப்பாக போதிய வேலைவாய்ப்பின்றிய மற்றும் உடல், அறிவார்ந்த குறைபாடுகளை கொண்டவர்கள் அதிகளவில் பயனடைவர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

அதுமட்டுமின்றி, ஆதரவின்றி தனியாக வாழும் நபர்களை இலக்காக கொண்டு நடைமுறைப்படுத்தப்படும் இந்த திட்டத்தினால் எதிர்வரும் 2023 ஆம் ஆண்டில் ஒரு லட்சம் மக்களை வறுமையின் பிடியிலிருந்து மீட்க முடியும் என்றும் அரசு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

அரசாங்கத்தின் வறுமை ஒழிப்பு திட்டத்தினால் எதிர்வரும் 2023 ஆம் ஆண்டுக்குள் வறுமைக் கோட்டின் கீழுள்ள மக்களின் ஆண்டு வருமானம் 12 ஆயிரத்து 749 டொலரில் இருந்து 18 ஆயிரத்து 29 டொலராக அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg