Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

புதிய வீடுகளை அமைத்துத்தர வேண்டும் என மக்கள் ஆர்ப்பாட்டம்!

In இலங்கை
Updated: 12:01 GMT, Dec 12, 2017 | Published: 12:01 GMT, Dec 12, 2017 |
0 Comments
1113
This post was written by : Puvanes

அட்டன் கொழும்பு பிரதான வீதியை மறித்து கினிகத்தேனை கலுகல பகுதியில் பொல்பிட்டிய பிரதேச மக்கள் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.

புரோட்லேன்ட் நீர் மின் உற்பத்தி நிலையம் அமைந்துள்ள குறித்த பகுதியில், இந்த நீர்மின் உற்பத்தி நிலையத்தின் அமைப்பினால் அப்பகுதியில் வசித்துவரும் மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகிளிருந்தனர்.

இதன் காரணமாக புரோட்லேன்ட் நீர் மின் உற்பத்தி நிலையத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் வீடுகளைக்கட்டுவதற்கான நட்டஈட்டினை குறித்த நீர்மின் நிலையம் வழங்கவேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சுமார் 80இற்கும் அதிகமான மக்கள் இந்த ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டதால் 2 மணிநேரத்திற்கும் அதிகமாக குறித்தபகுதியில் வாகனநெரிசல் ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து நீர்மின் நிலையம் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ள சுரங்கப்பாதைக்கு அருகில் சென்று அந்த வேலைத்திட்டத்தினை நிறுத்தவேண்டும் எனவும், நட்டஈட்டுத் தொகையை வழங்கவேண்டும் எனவும் ஆர்ப்பாட்டகாரர்கள் கோஷங்களை எழுப்பியுள்ளனர்.

மேலும், புரோட்லேன்ட் நீர்மின் உற்பத்தி நிலையத்தின் வேலைத்திட்டத்தில் பாதிப்புக்குள்ளான மக்களுக்கு மாதாந்தம் 30,000 ரூபாய் நஷ்டஈடு வழங்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் தமக்கு 30,000 ரூபாய் நட்டஈடு வேண்டாம். வீடமைத்து வாழக்கூடிய பெருந்தொகையான பணம் வேண்டும் எனவும், அல்லது வீடு அமைத்து தரும்படியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

protest001 protest002 protest003

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg