Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

காட்டுச் சிறுத்தைகள் நாட்டுக்குள் நடமாட்டம்! – பொதுமக்கள் போராட்டம்

In இலங்கை
Published: 12:17 GMT, Dec 12, 2017 |
0 Comments
1101
This post was written by : Puvanes

திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை ரொசிட்டா தோட்டத்தில் வசிக்கும் மக்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் நேற்று (திங்கற்கிழமை) சிறுத்தை ஒன்றினால் பிரதேசவாசி ஒருவர் தாக்குதலுக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே குறித்த போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

அண்மைக்காலமாக தோட்டங்கள் காடாகி வருவதால் சிறுத்தைகளின் தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாகவும், கடந்த ஒரு சில மாதங்களில் இத்தோட்டத்தில் பலர் சிறுத்தைத் தாக்குதலுக்கு இலக்காகி இருப்பதாகவும், தாக்கப்பட்டவர்களுக்கு எந்தவித நட்டஈடும் வழங்க முன்வரவில்லை எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், 15 கிலோமீற்றருக்கு அப்பால் வசித்த சிறுத்தைகள் தற்போது ஒரு கிலோமீற்றர் தூரத்தில் குடியிருப்புகளுக்கு வந்து தொழிலாளர்களை தாக்குகின்றன எனினும் தோட்ட நிர்வாகமோ, வன ஜீவராசிகள் திணைக்களமோ இந்த விடயத்தில் அக்கறை காட்டவில்லை எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனவே, பிரதேசத்தில் வசிக்கும் மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருவதாக குறிப்பட்டதோடு, இது தொடர்பான தகுந்த நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

kotagala002 kotagala003 kotagala004

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg