Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விஷேட தேவையுடையோர் தினம் வவுனியாவில் இடம்பெற்றது!

In இலங்கை
Updated: 13:50 GMT, Dec 12, 2017 | Published: 13:50 GMT, Dec 12, 2017 |
0 Comments
1147
This post was written by : Puvanes

வவுனியாவில் சர்வதேச விஷேட தேவையுடையோர் தினவிழா இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றது.

வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில், வடமாகாண சமூகசேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் திருமதி வனஜா செல்வரத்தினம் தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இதன்போது, விஷேட தேவைக்குட்பட்டவர்களால் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டதுடன்,சர்வதேச விஷேட தேவைக்குட்பட்டவர்கள் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட மாகாணமட்ட வினாவிடை போட்டி மற்றும் மாவட்ட மட்ட விஷேட தேவையுடையோர் விளையாட்டு நிகழ்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

வடக்கின் ஐந்து மாவட்டங்களை சேர்ந்த விஷேட தேவையுடையோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்ததுடன், சமூக சேவையாளர்கள் பலரும் நிகழ்வின் போது கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் முல்லைத்தீவு, கிளிநோச்சி, மன்னார், யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா பிரதேச செயலகங்களைச் சேர்ந்த உத்தியோகஸ்தர்கள் மற்றும் சமூக சேவைகள் திணைக்களங்களின் உத்தியோகஸ்தர்கள், விஷேடதேவைக்குட்பட்டவர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg