Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தமிழ்க் காங்கிரஸ் முல்லைத்தீவு, அம்பாறையில் கட்டுப் பணம் செலுத்தியது!

In இலங்கை
Updated: 14:14 GMT, Dec 12, 2017 | Published: 14:14 GMT, Dec 12, 2017 |
0 Comments
1176
This post was written by : Puvanes

அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி முல்லைத்தீவு மாவட்டத்தின் நான்கு பிரதேச சபைகளுக்கும் அம்பாறை மாவட்டத்தில் உள்ள ஆறு பிரதேச சபைகளுக்கும், நகர சபைத் தேர்தலில் களமிறங்குவதற்கான கட்டுப்பணத்தினை செலுத்தியுள்ளது.

தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் முல்லை மாவட்ட முகவர் திலகநாதன் கிந்துஜன் நேற்று (திங்கற்கிழமை) முல்லைத்தீவு மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் குறித்த கட்டுப்பணத்தினை செலுத்தினார்.

அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில், ஆலையடிவேம்பு, பொத்துவில், கல்முனை, நாவிதன்வெளி, காரைதீவு ஆகிய ஆறு நகரசபைகளுக்கான கட்டுப்பணம், கட்சியின் செயலாளர் செ.கஜேந்திரன் மற்றும் மு.வரதராஜா ஆகியோரினால், அம்பாறை மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் செலுத்தப்பட்டுள்ளது.

இதன்போது அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் வருகைத்தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg