Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அரியதோர் வாய்ப்பு தவறவிடவேண்டாம்! – பூமியில் பொழியவுள்ள விண்கற்கள் மழை

In அறிவியல்
Published: 15:01 GMT, Dec 12, 2017 |
0 Comments
1633
This post was written by : Puvanes
earth001

எதிர்வரும் நாற்களில் விண்கற்கள் மழை பொழியவுள்ளதாகவும், இலங்கை மக்கள் இதனை தெளிந்த வானத்தில் அவதானிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேராசிரியர் சந்தன ஜயரத்ன இந்தத் தகவலை வெளிப்படுத்தியுள்ளார். அதன்படி எதிர்வரும் 17ஆம் திகதி வரையிலும் ஜெமினிட் எனப்படும் விண்கற்கள் பூமியில் மழையாக பொழியவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விண்கற்கள் பொழிவானது நாளை (புதன்கிழமை) மிக அதிகமாகக்காணப்படும். எனவே தெளிவான வானம் உள்ள இடங்களில் நாளை இரவு இலங்கை மக்களுக்கு இந்த அரிய நிகழ்வை காணக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை இரவு 9 மணிக்கு பின்னர் கிழக்கு வானத்திலும், நள்ளிரவு நேரத்தில் மத்திய வானத்திலும், 2 முதல் 4 மணி நேரப்பகுதியில் மேற்கு வானிலும் இந்த நிகழ்வை அவதானிக்க முடியும்.

மேலும் நாளை மறுதினம் (வியாழக்கிழமை) அதிகாலை 2 தொடக்கம் 4 மணி வரையான காலப்பகுதியே விண்கற்கள் பொழிவை அவதானிக்க உரிய நேரம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மணித்தியாலயத்திற்கு சுமார் 120 இற்கும் அதிகமான விண்கற்கள் பூமியின் மீது விழும். இந்த நிகழ்வின் போது வெள்ளை, மஞசள், பச்சை, நீளம், சிகப்பு போன்ற பல்வேறுபட்ட நிறங்களிலான விண்கள் பொழிவுகளை அவதானிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வானது மிகவும் அபூர்வ நிகழ்வு எனவே இந்த அரிய வாய்ப்பை தவறவிடவேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விண்கற்கள் பொழிவினை வெற்றுக் கண்களால் பார்க்கலாம் எனவும் இதனால் பாதிப்புகள் எதுவும் இல்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விண்கற்கள் பூமியின் மீது அதிகளவில் வீழ்ந்தாலும் பாதிவழியிலேயே அவை எரிந்து சாம்பலாகி விடுவதால் இதனால் எந்தவித ஆபத்துகளும் பூமிக்கு நேராது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg