Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட தலைவர் சி.தண்டாயுதபாணி கட்டுப்பணம் செலுத்தினார்

In இலங்கை
Updated: 15:38 GMT, Dec 12, 2017 | Published: 15:38 GMT, Dec 12, 2017 |
0 Comments
1243
This post was written by : Puvanes

திருகோணமலை மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளுராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக, திருகோணமலை நகர சபைக்கான , குச்சவெளி, தம்பலகாமம், மொரவேவ, மூதூர் ஆகிய சபைகளுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) கட்டுப்பணம் செலுத்தி உள்ளது.

ஏற்கனவே கடந்த வியாழக்கிழமை சேருவில, வெருகல், கிண்ணியா நகரசபை, பட்டணமும் சூழல் ஆகிய சபைகளுக்கு கட்டுணம் செலுத்தி இருந்தது. எஞ்சிய 5 சபைகளுக்கு, இலங்கை தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட தலைவர் சி.தண்டாயுதபாணி தலைமையிலான குழுவினர் குறித்த கட்டுப்பணத்தினை செலுத்தினர்.

இதேவேளை இம்முறை நடைபெறும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் வரதராஜபெருமாளின் ஆலோசனையின் கீழ் செயற்படும் தமிழ் சமுக ஜனநாயக கட்சி தனித்து போட்டியிட உள்ளது.

அதன்படி திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபையில் போட்டியிடுவதற்காக கட்டுப்பணமானது இன்று கட்சியின் திருகோணமலை அமைப்பாளர் சிவகுமார் மூலமாக செலுத்தப்பட்டது.

trinco001

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg