Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

போராட்டங்கள் தீர்வுக்கான வழி அல்ல – மஹிந்த அமரவீர

In இலங்கை
Published: 16:12 GMT, Dec 12, 2017 |
0 Comments
1086
This post was written by : Puvanes
mahinda_amaraweera001

பணிப்புறக்கணிப்பும், போராட்டங்களும் பிரச்சினைக்கான தீர்வு அல்ல என அமைச்சர் மஹிந்த அமரவீர சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகசந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் அங்கு கருத்து வெளியிடுகையில், எந்தவொரு பிரச்சினையை முன்னிட்டும் உடனடியான அதற்காக பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதும், போராட்டங்களை மேற்கொள்வதும் தீர்விற்கான வழிமுறையல்ல.

க.பொ.த சாதாரணத்தரப் பரீட்சைகள் ஆரம்பமாகியுள்ள அதேசமயம் புகையிரத பணிப்பகிஷ்கரிப்பு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனால் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள்.

நமது பிள்ளைகளே பரீட்சைக்குத் தோற்றவுள்ளார்கள் என்பதனைக் கவனத்தில் எடுத்துக்கொள்ளவேண்டும். மாணவர்களில் நலன் தொடர்பாக கவனத்தில் எடுத்து இந்த வேலை நிறுத்தத்தினை நிறைவுக்கு கொண்டுவரவேண்டும்.

அதேபோன்று, தற்போதைய நிலையில் ஊடகங்களில் மக்கள் தங்களது சுயகருத்துகளை முன்வைத்துவருவதனை அறியக்கூடியதாக உள்ளது எனவும் மஹிந்த அமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg