Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜெயலலிதாவிற்கு நடந்தது என்ன? – மருத்துவர் கூறிய பரபரப்புத் தகவல்

In இந்தியா
Published: 16:55 GMT, Dec 12, 2017 |
0 Comments
2708
This post was written by : Puvanes
jeya001

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு அப்பலோவில் அனுமதிக்கும் முன்பு அதிக அளவு ஸ்டீராய்ட் மாத்திரைகள் கொடுக்கப்பட்ட காரணத்தினாலேயே அவருடைய உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டது என மருத்துவர் சங்கர் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான உண்மையைக் கண்டறிய அமைக்கப்பட்ட விசாரணை ஆணைக்குழுவில் இன்று (செவ்வாய்க்கிழமை) முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் டிசம்பர் 5ஆம் திகதி ஜெயலலிதா மரணமடைந்தார். எனினும் அவருடைய மரணத்தில் பல்வேறு மர்மங்கள் இருப்பதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விஷேட விசாரணைக்குழுவை தமிழக அரசு அமைத்தது. குறித்த விசாரணை ஆணைக்குழு தற்போது வேகமாக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.

இந்தநிலையில், ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 75 நாட்களும் அவருக்கு சிகிச்சை வழங்கிய மருத்துவர்கள் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

தமிழகத்தை உலுக்கிய ஜெயலலிதாவின் மரணம் தொடர்பில் தற்போது அவருக்கு சிகிச்சை வழங்கிய அக்குபஞ்சர் மருத்துவர் சங்கர் தெரிவித்துள்ள தகவல்கள் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளன.

மேலும், இதன் காரணமான ஜெயலலிதாவிற்கு வேண்டுமென்றே அதிக மாத்திரைகள் கொடுக்கப்பட்டதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்த நிலையில் கூடிய விரைவில் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான மர்மங்கள் வெளிச்சத்திற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg