Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

யுத்த வடுக்களை அரசாங்கத்தால் தனித்து ஆற்ற முடியாது! – மங்கள

In இலங்கை
Updated: 06:45 GMT, Dec 13, 2017 | Published: 02:43 GMT, Dec 13, 2017 |
0 Comments
1201
This post was written by : Varshini

இலங்கையில் கடந்த மூன்று தசாப்த காலமாக இடம்பெற்ற யுத்தத்தால் ஏற்பட்ட வடுக்களை ஆற்ற நீண்டகாலம் செல்லும் என்று நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார். எனினும், இச்செயற்பாட்டை அரசாங்கத்தால் தனித்து முன்னெடுக்க முடியாதென அவர் மேலும் குறிப்பிட்டார்.

இலங்கைக்கான ஜேர்மன் தூதுவராலயத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

எனினும், இவ்விடயத்தில் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் பல விடயங்களை முன்னெடுத்து வருவதாக குறிப்பிட்ட மங்கள, யத்த வடுக்களை ஆற்ற அனைவரதும் ஒத்துழைப்பு அவசியம் என்றும் குறிப்பிட்டார்.

இதேவேளை, அரசாங்கத்திற்கு பாரிய சவால்கள் காணப்படும் நிலையில், அவற்றை எதிர்கொண்டு முன்னோக்கிச் செல்ல காத்திரமான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டியுள்ளதெனவும் குறிப்பிட்டுள்ளார். எனினும், சகல விடயங்களையும் அரசாங்கத்தால் மாத்திரம் தனித்து மேற்கொள்ள முடியாதென்றும் சகல தரப்பினரதும் அர்ப்பணிப்பு அவசியம் என்றும் மங்கள மேலும் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg