Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

யுத்தத்தால் தோன்றிய கருத்தியலை மாற்ற முடியாதுள்ளது – ஜனாதிபதி மைத்திரி

In இலங்கை
Published: 03:11 GMT, Dec 13, 2017 |
0 Comments
1197
This post was written by : Varshini

இலங்கையில் யுத்தத்தை நிறைவுக்கு கொண்டுவந்த போதிலும் அதனால் ஏற்பட்ட கருத்தியலை மாற்ற முடியாதுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார். அத்தோடு, நாட்டை பிளவுபடுத்தும் சக்திகள் சர்வதேசத்தில் செயற்படுவதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற மத சகவாழ்வு தொடர்பான மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார். ஜனாதிபதி தொடர்ந்து குறிப்பிடுகையில்-

”எமது மக்கள் மத்தியில் காணப்பட்ட முரண்பாடுகளே ஆயுத போராட்டம் வரை சென்றது. யுத்தம் நிறைவடைந்த போதும், நாட்டை பிளவுபடுத்தும் சக்திகள் சர்வதேசத்தில் செயற்படுகின்றன. யுத்தத்தின் மூலம் தோற்றம் பெற்ற கருத்தியலை தோற்கடிக்க முடியாதுள்ளது. எமது நாட்டிற்கு வெளியே சர்வதேச ரீதியில் பிரிவினைவாத கொள்கையும் கருத்திலும் உள்ளன. இதனை ஆயுதத்தால் தோற்கடிக்க முடியாது.

எனினும், இந்த கருத்தியலை இன்னொரு கருத்தியலால்தான் தோற்கடிக்க முடியும். அதன் வெளிப்பாடாகவே இன்று தேசிய சகவாழ்வு மற்றும் நல்லிணக்க அமைச்சின் ஊடாக அதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சகவாழ்வை ஏற்படுத்தும் முயற்சியில் அமைச்சர் மனோ கணேசனின் அமைச்சின் மூலம் பல நகர்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதனையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன்.

எமது நாட்டில் சகவாழ்வு இல்லாத காரணத்தினாலேயே அதனைப் பற்றி பேசவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சமூகங்களுக்கு இடையில் காணப்படும் முரண்பாடுகளை களைந்து சந்தேகமற்ற தன்மையை ஏற்படுத்திக் கொள்வது அவசியம்.

சகல தரப்பிலும் கடும்போக்காளர்கள் உள்ளனர். சகவாழ்வை பற்றி கதைக்கும் எம்மைப் பார்த்து இவ்வாறானவர்கள் ஏளனம் செய்கின்றனர்.

எனினும், நாட்டில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்துவதே எமது நோக்கமாகும். அதற்கான செயற்பாடுளை நாம் அர்ப்பணிப்புடன் மேற்கொள்வோம். இதற்கு சகல மதத் தலைவர்களதும் பூரண ஒத்துழைப்பு எமக்கு அவசியம். அதுவே எம்மை பலப்படுத்தும்” என்றார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg