Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஈரானில் அடுத்தடுத்து நிலநடுக்கம்: 18 பேர் படுகாயம்

In உலகம்
Updated: 04:18 GMT, Dec 13, 2017 | Published: 04:18 GMT, Dec 13, 2017 |
0 Comments
1144
This post was written by : Varshini

ஈரானின் தென்கிழக்கு மாகாணமான கேர்மனில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நேற்று மற்றும் இன்று (புதன்கிழமை) அதிகாலை வேளைகளில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களில் சிக்கி, இதுவரை 18 பேர் படுகாயமடைந்துள்ளதோடு, சுமார் 20 வீடுகள் சேதமடைந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.

சுமார் 820,000 மக்கள் வாழும் கேர்மனியின் வடக்குப் பகுதியில் நேற்று காலை 5.9 மக்னிடியூட் அளவில் நிலநடுக்கம் பதிவானது. அதனைத் தொடர்ந்து இன்று அதிகாலை 1 மணியளவில் 6.2 மக்னிடியூட் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

நிலநடுக்கம் காரணமாக மக்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளதுடன், அச்சத்தில் உறைந்துள்ளனர்.

இதேவேளை, நேற்று முன்தினம் ஈராக்கின் மேற்குப் பகுதியில் 5.4 மக்னிடியூட் அளவிலான நிலக்கம் ஒன்றும் பதிவாகியுள்ளது. குறித்த பகுதியில் கடந்த நவம்பர் மாதம் ஏற்பட்ட 7.3 அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 530 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது. குறித்த நிலக்கடுக்கம் தொடர்பில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் போதுமானதாக இல்லையென ஜனாதிபதி Hassan Rouhani  விமர்சிக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg