Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கலிபோர்னியா காட்டுத்தீயை அணைக்க முடியாமல் திண்டாட்டம்: நூற்றுக்கணக்கான கட்டடங்கள் நாசம்

In
Updated: 04:44 GMT, Dec 13, 2017 | Published: 04:44 GMT, Dec 13, 2017 |
0 Comments
1185
This post was written by : Varshini

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் பற்றி எரியும் காட்டுத்தீயினால் நூற்றுக்கணக்கான கட்டங்களும் வீடுகளும் சேதமடைந்துள்ளன. அத்தோடு, பல லட்சம் ரூபாய் பெறுமதியான சொத்துக்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.

கடந்த 4ஆம் திகதி கலிபோர்னியாவின் வடக்குப் பகுதியில் ஏற்பட்ட இந்தக் காட்டுத்தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி வருகின்றனர். அத்தோடு, ஹெலிகொப்டர்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

காற்றின் காரணமாக தீ வேகமாக பரவி வரும் நிலையில், குடியிருப்புகளில் உள்ள மக்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

நியுயோர்க் நகரத்தை விட பெரிய நகரான பர்பரா கௌண்டிஸ் மற்றும் வென்ச்சுரா ஆகிய பகுதிகளின் மலையோர பிரதேசத்திலேயே இத்தீ பரவியுள்ளது. இதனால், நகரத்தின் 948 சதுர கிலோமீற்றர்களுக்கும் அதிகமான நகர்ப்பகுதி புகைமூட்டத்தால் மூடப்பட்டுள்ளது.

அதிகரிக்கும் காற்று காரணமாக நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு மாத்திரம் சுமார் 2500இற்கும் அதிகமான ஏக்கர் வனப்பகுதி நாசமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இவ்வாறு இதுவரை சுமார் 50,000இற்கும் அதிகமான ஏக்கர் வனப்பகுதி தீயில் கருகியுள்ளது.

புகைமூட்டம் காரணமாக மக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்ற நிலையில், தீயை அணைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அத்தோடு, தீயினால் ஏற்பட்ட சேத விபரங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டு வருகின்றது.

கலிபோர்னிய மாநில வரலாற்றில் பதிவாகியுள்ள ஐந்தாவது மிகப்பெரிய தீப்பரவல் சம்பவம் இதுவாகும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg