Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உடல் எடை அதிகரிக்கிறதா? கவலையை விடுங்கள்!

In
Updated: 12:58 GMT, Dec 17, 2017 | Published: 06:27 GMT, Dec 17, 2017 |
0 Comments
1805
This post was written by : Kemasiya

உடல் எடை அதிகரிக்கிறது என்று கவலைப்படுபவர்கள் உங்கள் உணவுப் பழக்கத்தை முதலில் மாற்றி கொள்ள வேண்டும்.

அதிகாலையிலும், இரவு வேளையிலும் உண்ணும் உணவு, ஆரோக்கியமானதாகவும் இலகுவாக செமிபாடு அடையும் வகையிலும், கலோரி குறைந்ததாகவும் இருக்க வேண்டும்.

அவ்வாறு காலையில் உட்கொள்ள கூடிய கலோரி குறைந்த உணவு வகையொன்றை கீழே நோக்கலாம்.

ரொட்டியினால் ஆன சான்வீச்

தேவையான பொருட்கள்
ஆட்டா மா
சீஸ்
தக்காளி
கீரை (விரும்பியது)
கரட்
உப்பு
சர்க்கரை
திராட்சைப் பழம்

செய்முறை

முதலில் ஆட்டா மாவை கொண்டு சாதாரணமான ரொட்டி கலவையினை தயாரித்து, உருண்டைகளாக உருட்டி வைத்து கொள்ள வேண்டும்.

அதன் பின்னர் கீரை, தக்காளி, கரட் என்பவற்றை சிறு துண்டுகளாக வெட்டி வேக வைத்து எடுக்க வேண்டும்.

வேகிய கலவைக்குள் உப்பு மற்றும் சக்கரை, சீஸ், சேர்த்து  மீண்டும் கலவையினை சேர்க்க வேண்டும். விரும்பினால் சர்க்கரைக்கு பதிலான மிளகும் சேர்க்கலாம்.

பின்னர் ரொட்டியினை வாட்டியெடுத்து,  நடுவில் குறித்த கலவையினை வைத்து ரோல் பண்ணி பரிமாறலாம்.

இந்த உணவை உண்ட பின்னர்,  2 அல்லது 3 திராட்சை பழத்தை உட்கொள்ளுங்கள்.ஆனால் உணவின் பின்னர் தேனீர் குடிக்காதீர்கள்.

இரவு வேளையில் குறித்த உணவை உட்கொள்வீர்களாயின் பால் எடுத்துக்கொள்வது சிறந்தது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg