ஆர்யாவிற்காக ஒன்று சேர்ந்த திரிஷா-ஹன்சிகா!

நடிகர் ஆர்யாவிற்காக நடிகை திரிஷாவும், ஹன்சிகாவும் ஒன்று சேர்ந்து ‘கஜினிகாந்த்’ போஸ்டரைத் தமது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.
ஆர்யா நடிப்பில் தற்போது உருவாகி வரும் ‘கஜினிகாந்த்’திரைப்படத்தில் ஆர்யாவிற்கு ஜோடியாக ‘வனமகன்’ புகழ் சாயிஷா நடிக்கிறார். இப்படத்தை ‘ஹரஹர மஹாதேவகி’ படத்தை இயக்கிய சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கி வருவதுடன், ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா இப்படத்தை தயாரித்து வருகிறார்.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை ஆர்யாவின் (11.12.2017) பிறந்தநாளையும் ரஜினிகாந்த்தின் (12.12.2017) பிறந்தநாளையும் முன்னிட்டு 11.12.2017 ஆம் தேதி இரவு 11:59 மணிக்கு ‘கஜினி’ சூர்யா வெளியிட்டிருந்தார்.
இந்நிலையிலேயே தற்போது இதன் இரண்டாவது போஸ்டரை நடிகை திரிஷாவும், ஹன்சிகாவும் அவர்களது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்கள்.
ஆர்யாவிற்காக திரிஷாவும் ஹன்சிகாவும் ஒன்று சேர்ந்து ‘கஜினிகாந்த்’ போஸ்டரை வெளியிட்டிருப்பது இரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. இதனால் இதற்கு டுவிட்டுக்குள் கோடிக் கணக்கில் குவிந்து கொண்டிருக்கின்றன.