Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பில்லியன் செலவில் லண்டனில் புதிய அமெரிக்க தூதரகம்: திறப்பு விழாவில் ட்ரம்ப்?

In
Updated: 06:44 GMT, Dec 14, 2017 | Published: 06:44 GMT, Dec 14, 2017 |
0 Comments
1421
This post was written by : Risha

லண்டனில் அமைக்கப்பட்டுள்ள புதிய அமெரிக்க தூதரகத் திறப்பு விழாவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கலந்துக் கொள்வார் என ட்ரம்பினால் நியமிக்கப்பட்ட பிரித்தானியாவிற்கான அமெரிக்க தூதுவர் வுடி ஜோன்சன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

அமெரிக்க தூதரகமானது, ஒரு பில்லியன் டொலர் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய கட்டடத்திற்கு மாற்றப்படவுள்ளது. இதன் திறப்பு விழா எதிர்வரும் ஆண்டு நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகின்ற போதிலும் திகதி இன்னும் இறுதிசெய்யப்படவில்லை.

இது குறித்து தொடர்ந்து தெரிவித்த பிரித்தானியாவிற்கான அமெரிக்க தூதுவர், ”பிரித்தானியாவிற்கான உத்தியோகப்பூர்வ விஜயத்திற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய விஜயத்திற்கு அவர் சம்மதம் தெரிவித்துள்ளார். எனினும், அமெரிக்க தூதரகத் திறப்பு விழாவிற்கான திகதி இன்னும் முடிவுசெய்யப்படவில்லை.

பல தசாப்தகால அனுபவங்களின் அடிப்படையில் அமெரிக்காவிற்கும் பிரித்தானியாவிற்கும் இடையிலான உறவு முன்னரைவிட தற்போது வலுவடைந்துள்ளது” எனக் குறிப்பிட்டார்.

இதேவேளை, இப்புதிய அமெரிக்க தூதரக கட்டடமானது கண்ணிம் மற்றும் சமாதானத்தின் சின்னமாகும் என கட்டட வடிவமைப்பாளர் ஜேம்ஸ் டிம்பர்லேக் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg