Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பாரிய விபத்து: கோத்தார்ட் சுரங்கப் பாதை மூடப்பட்டது!

In ஐரோப்பா
Published: 08:24 GMT, Dec 14, 2017 |
0 Comments
1298
This post was written by : Risha

இருவரின் உயிரை காவுகொண்ட பாரிய விபத்தையடுத்து சுவிட்சர்லாந்தின் கோத்தார்ட் சுரங்கப் பாதை சில மணி நேரங்களுக்கு மூடப்பட்டுள்ளது.

குறித்த சுரங்கப் பாதைக்குள்  நேற்று (புதன்கிழமை) டிரக் வண்டியொன்றுடன் கார் மோதி விபத்திற்குள்ளானதில் இருவர் உயிரிழந்ததுடன், முக்கிய போக்குவரத்து பாதை சேதமாக்கப்பட்டது.

ஜேர்மன் இலக்கத் தகட்டுடன் பயணித்த காரொன்றே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது. விபத்தில் நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.

குறித்த சுரங்கப் பாதைக்குள் கடந்த 2001ஆம் ஆண்டு இரு டிரக் வண்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதி தீப்பிடித்து விபத்திற்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg