Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வீட்டில் செல்வம் பெருகி பணவரவை அதிகரிக்க செய்யவேண்டியவை!

In ஆன்மீகம்
Published: 09:29 GMT, Dec 14, 2017 |
0 Comments
2014
This post was written by : Puvanes
god001

இறைவழிபாடு என்பது மனஅமைதியைத்தரும். வாழ்வின் துயரங்கள் நீங்கி உய்வுபெற்றுக்கொள்வதற்கு கடவுள் வழிபாடு என்பது முக்கியமானதாகும்.

இப்போதைய மனித வாழ்வில் துன்பங்கள், துரயரங்களுக்கு முக்கிய காரணியாக அமைவனவற்றில் செல்வமும் ஒன்று. அந்தவகையில் வீட்டில் செல்வம் அதிகரிக்கும் வழிமுறைகள் தெய்வ வழிபாட்டின் மூலம் சாத்தியமாகின்றன.

செல்வக்கடவுள் மஹாலட்சுமிக்கு 24 வெள்ளிக்கிழமைகள் தொடர்ந்து விளக்கேற்றி வழிபட்டு வந்தால் வீட்டில் செல்வம் பெருகும்.

கடவுள் வழிபாட்டுக்கு உகந்தநாள் வெள்ளி, இந்த கிழமைகளில் அரசமரத்தடியில் வீற்றிருக்கும் விநாயகருக்கு 11 தீபம் ஏற்றி, 11 முறைகள் சுற்றிவந்து வழிபட்டால் செல்வம் அதிகரிக்கும்.

வெள்ளிக் கிழமையில் சுக்கிர ஓலையில் மகாலட்சுமி அஷ்டோத்திரத்தினைக் கூறி செந்தாமரை இதழ் கொண்டு அர்ச்சனை செய்துவந்தால் லக்ஷமி வீட்டில் செல்வத்தை அதிகரிப்பாள்.

குபேரன் செல்வத்துக்கு அதிபதி அந்தவகையில் வியாழக்கிழமைகளில் மாலை 4 முதல் 5 மணிவரை குபேரகாலமாகும். இந்த நேரங்களில் தாமரையில் திரியேற்றி தீபமிட்டு குபேரனை வழிபட்டால் பணவரவை குபேரன் அதிகரிப்பார்.

தூயநீரில் வாசணைத்திரவியம் கலந்து தினமும் இருவேளைகள் லக்ஷமியை மந்திரம் கூறி வழிபட்டுவரவேண்டும். பின்னர் அந்த நீரை குடியிருக்கும் வீடுமுழுதும் தெளித்துவந்தால் வீட்டில் செல்வம் பெருகும்.

வீட்டில் வெண்புறாக்களை வளர்த்துவர பணவரவு அதிகரிக்கும். அதேபோன்று ஓடும் வெண்குதிரையின் படம், ஜோடிக் கழுதையின் படங்களை தினமும் பார்த்துவந்தால் பணவரவும் அதிகரிக்கும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg