Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிறு அறிகுறிகளையும் அலட்சியப்படுத்த வேண்டாம் அது உயிரைப்பறித்துவிடும்!

In
Published: 10:03 GMT, Dec 14, 2017 |
0 Comments
1868
This post was written by : Puvanes
head001

மூளைக்கட்டி என்பது உயிர்க்கொல்லி நோய். இதனை ஆரம்பநிலையிலேயே கண்டுபிடித்துவிட்டால் சத்திரசிகிச்சை மூலம் இதனை அகற்றிவிடலாம். மூளையினுள் உயிரணுக்களின் அசாதாரண வளர்ச்சியையே இந்த மூளைக்கட்டி குறிக்கின்றது.

உடம்பில் வெளிப்புறங்களில் ஏற்படும் கட்டிகள் எளிதாகத் தெரியக்கூடியவை எனினும் மூளையில் உருவாகும் கட்டிகளை எளிதில் கண்டுகொள்வது சாத்தியமில்லை. இது படிப்படியாக வளருமானால் உயிரை பறித்துவிடும்.

அப்படி என்றால் இந்த மூளைக்கட்டி உருவாற்றத்தை எவ்வாறு அறிந்து கொள்வது? அதற்கான அறிகுறிகள் யாவை?

தொடர்ச்சியான தலைவலி இருந்தால் அதனை எளிதில் அலட்சியப்படுத்திவிடக்கூடாது. காரணம் இது மூளைக்கட்டி இருப்பதன் அறிகுறியாக இருக்கலாம். பேச்சில் ஏற்படும் தடுமாற்றம் அதேபோன்று தெளிவற்ற பேச்சு மற்றும் பார்வை இழப்பு / மங்குதல் இவையும் மூளைக்கட்டியை காட்டும் அறிகுறிகளாகும்.

அதிகமாக பலவீனம், உடற் சோம்பல் போன்ற உணர்வுகள், மட்டுமல்ல உடறுப்புகளின் செயலிழப்பு போன்றனவும் மூளைக்கட்டி இருப்பதை காட்டுகின்றன என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

தொடர்ந்து உணவுச்செரிமானமின்றிய அவதி அல்லது அடிக்கடி வாந்தி போன்ற நீண்டநாள் ஆரோக்கியமற்ற தன்மைகள், வானிலைப்போல் அடிக்கடி மனநிலைகளில் ஏற்படும் மாற்றங்கள் அதாவது, விரக்தி, பயம், கோபம், கவலை, மகிழ்ச்சி, சிரிப்பு, வெறுப்பு என அடிக்கடி வழக்கத்திற்கு மாறாக மனநிலைமாறுவதும் மூளைக்கட்டியின் அறிகுறியாக இருக்கும்.

பெண்கள் கருவுறாமை போன்ற பிரச்சினையை சந்திக்கும் வாய்ப்புகளுக்கும் மூளைக்கட்டி ஒரு காரணமாக அமைகின்றது. உடல் சமநிலையினை இழந்து ஒருபுறமாக சாந்தவாறு நடக்கும் நிலையும் மூளைக்கட்டியை காட்டும் அறிகுறிகள் எனப்படுகின்றது.

இத்தகைய அறிகுறிகளை அலட்சியம் செய்யாது தகுந்த மருத்துவ ஆலோசனைகளைப்பெற்றுக்கொள்ள வேண்டும் இல்லையேல் அது உயிலைப் பறித்துவிடும் அபாயம் ஏற்படும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg