Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இந்தியாவில் அப்பிளுக்கு ஏற்பட்ட நிலை! – கோடிகள் குவிகின்றன

In வணிகம்
Published: 10:27 GMT, Dec 14, 2017 |
0 Comments
1076
This post was written by : Puvanes
apple001

முன்னணி வாய்ந்த அப்பிள் நிறுவனமானது இந்தியாவில் கடந்தவருடத்தினை விடவும், இந்த வருடம் 17 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது. எனினும் கடந்த ஆறு ஆண்டுகளுக்கான வருமான வளர்ச்சியில் வீழ்ச்சியடைந்துள்ளது.

2017ஆம் ஆண்டு நிலவரப்படி இந்தியாவில் 11618.7 இந்திய ரூபாய்களை அப்பிள் வருமானமாக ஈட்டியது. 2016ஆம் ஆண்டு இது 9937 கோடிகளாக மட்டுமே இருந்தது.

எனினும் அதற்கு முந்திய ஆறு ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவின் அப்பிளில் வர்த்தக முயற்சி சரிவையே கண்டுள்ளது. இதற்கு ஏனைய நிறுவனங்களின் ஆளுமையே காரணம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தியாவைப் பொருத்தவரையிலும் 2017ஆம் ஆண்டில் அப்பிள் சாதனங்களில் விற்பனை விலை 2 சதவீதத்தால் குறைக்கப்பட்டுள்ளது. கடந்தவருடம் 22 இலட்சம் சாதனங்களை மட்டுமே விற்ற அப்பிள் இந்தவருடத்தில் 29 இலட்சம் சாதனங்களை இந்தியாவில் விற்றுள்ளது.

விலைகுறைப்பு நடவடிக்கை காரணமாகவே இந்த விற்பனை சாத்தியமாகியுள்ளது. இந்தியாவில் 30000ஆயிரம் ரூபாவிற்கு அதிகமாக விற்பனை செய்யப்படும் ஸ்மார்போன்களில் 35 சதவீத பங்குகளுடன் அப்பிள் முதலிடத்தினைப்பெற்றுகொண்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg