Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

2018 இல் இராசிகளுக்கு அதிஷ்டம் தரப்போகும் நிறங்கள்!

In ஆன்மீகம்
Published: 11:00 GMT, Dec 14, 2017 |
0 Comments
2334
This post was written by : Puvanes
colors001

பிரபஞ்சத்தைப் பொருத்தவரையிலும் கருமைக்கே அதிக வலிமை. என்றாலும் மனித வாழ்க்கையுடன் நிறங்கள் முக்கிய இடத்தினை பெற்றுக்கொண்டுள்ளன. ஜோதிட அடிப்படையிலும் நிறங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகின்றன.

நிறங்கள் என்பன மனிதர்களின் குணங்களை நிர்ணயிப்பவை மட்டுமல்லாது அதிஷ்டங்களையும் தேடித்தருவன என காலம் காலமாக நம்பப்பட்டு வருகின்றன.

அதன்படி பிறக்கப்போகும் 2018ஆம் வருடத்தில் எந்த எந்த இராசிகளுக்கு எந்தெந்த நிறங்கள் அதிஷ்டத்தை தரப்போகின்றன என்பதனைப் பார்க்கலாம்.

மேஷம்
இந்த இராசிகாரர்கள் செவ்வாய் கிரகத்தால் ஆளப்படுபவர்கள். இவர்களுக்கு 2018 இல் சிவப்பு நிறம் நல்லது கிடையாது. வெள்ளை, எலுமிச்சை பச்சை மற்றும் மரகத பச்சை போன்ற நிறங்களால் நன்மைகள் கிடைக்கக்கூடும்.

ரிஷபம்
சுக்கிரனால் ஆளப்படும் ரிஷபகாரர்களுக்கு குங்குமச்சிவப்பு மற்றும் இளம் (அப்பிள்) பச்சை சிறந்த நிறங்களாகும். இந்த நிறத்தில் ஆடைகளை அணிந்தால் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்கள் நடக்கும். அதிஷ்டம் தேடிவரும்.

மிதுனம்
புதன் கோளின் ஆதிக்கத்திற்கு உட்பட்டவர்கள் மிதுன இராசி கொண்ட அன்பர்கள். வெள்ளை, வெளிரிய சாம்பல் நிறங்கள் இவர்களுக்கு 2018 இல் அதிஷ்டம் பயக்கும். பச்சை நிற ஆடைகளை புதன் கிழமைகளில் அணிவது நன்மை தரும்.

கடகம்
சந்திரனால் ஆளப்படும் கடக இராசிக்காரருக்கு நீலநிறம், சிவப்பு சிறங்கள் அதிஷ்டத்தை கொடுக்கும். திங்கள் கிழமைகளில் வெள்ளை, கடல் பச்சை நிறங்களை உபயோகிப்பது நன்மைகளைத் தரும்

சிம்மம்
சூரியனால் ஆளப்படுபவர்கள் சிம்ம இராசிகாரர்கள். இவர்களுக்கு 2018இல் வெள்ளை மற்றும் தங்க நிறங்கள் அதிஷ்டத்தை ஏற்படுத்தும். வெளிரிய நிறம் இவர்களது வாழ்க்கையை மாற்றும் வல்லமை கொண்டது.

கன்னி
இயற்கையாகவே அதிஷ்டம் பொருந்திய கன்னி இராசிகாரர்களுக்கு பச்சை, நீலம் ஆகியன அதிர்ஷ்ட நிறங்களாக விளங்கும். இவர்கள் புதன் கிரகத்தால் ஆளப்படுவதால் நினைத்த காரியம் நடக்க புதன் கிழமைகளில் பச்சை நிறத்தில் ஆடைகளை அணியலாம்.

துலாம்
சுக்கிரனால் ஆளப்படும் துலாம் இராசிகாரர்கள் அடுத்த ஆண்டில் வெள்ளை, பச்சை, நீல நிறங்கள் மூலம் எடுத்த அனைத்து காரியங்களிலும் வெற்றியைத் தேடிக் கொள்ளலாம். வெள்ளி கிழமைகளில் சந்தன நிறம் ஏற்றது.

விருச்சிகம்
வலிமை பொருந்திய இந்த இராசிகார்களுக்கு கருப்பு அல்லது வெள்ளை நிறங்கள் அதிர்ஷ்ட நிறங்களாகும். நல்ல நாட்களில் இந்த நிறங்களை அணிவது அதிஷ்டத்தை வரவழைக்கும்.

தனுசு
வியாழன் கிரகத்தால் ஆளப்படும் தனுசு இராசிகார்கள் பச்சை, ஒரஞ்ச், சிவப்பு ஆகியன அதிர்ஷ்ட நிறங்கள். இவர்கள் மஞ்சள் நிற ஆடைகளை செவ்வாய் கிழமைகளில் அணிவதால் நினைத்த கருமங்கள் நிறைவேறும்.

மகரம்
சனியின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட மகர இராசிகாரர்களுக்கு 2018ஆம் ஆண்டில் நீலம், பச்சை, அன்னாசி ஆகிய நிறங்கள் அதிர்ஷ்டமாக இருக்கும். கருப்பு ஆடைகளை சனிக்கிழமைகளில் அணிந்தால் அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும்.

கும்பம்
கும்ப இராசிகாரர்கள் சிவப்பு, பச்சை, வான நீலம் போன்ற நிறங்கள் அதிர்ஷ்டமாகும். ஊதா அல்லது நடுஇரவு வான நீலம் ஆகிய நிறங்களில் உள்ள ஆடைகளை சனிக்கிழமைகளில் அணிவது அதிஷ்டத்தை தரும்.

மீனம்
2018ஆம் ஆண்டில் மீன இராசிக்காரர்களுக்கு பச்சை நிறத்தால் அதிர்ஷ்டம் உண்டு. வியாழக்கிழமைகளில் வெளிரிய மஞ்சள் நிற ஆடைகள் அதிஷ்டத்தை வாரி வழங்கும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg