மருக்களை உதிரச் செய்யும் இயற்கை வழிகள்!

அப்பிள் சீடர் வினிகர்: சருமத்தில் உள்ள மருக்களை உதிரச் செய்வதற்கு அப்பிள் சீடர் வினிகர் பெரிதும் உதவியாக இருக்கும். அதற்கு மரு உள்ள பகுதியை சுத்தம் செய்து, பின் ஒரு பஞ்சு துண்டை அப்பிள் சீடர் வினிகரில் நனைத்து பிழிந்து, மருக்களின் மீது வைத்து நன்கு காய வைக்க வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு 3 முறை செய்து வந்தால், மருக்கள் உலர ஆரம்பிக்கும். இப்படியே தொடர்ந்து 10 நாட்கள் செய்து வந்தால், மருக்கள் நன்கு உலர்ந்து உதிர்ந்துவிடும்.
விளக்கெண்ணெய் மற்றும் பேக்கிங் சோடா: 1 அரை டீஸ்பூன் விளக்கெண்ணெயில் 1 டீஸ்பூன் பேக்கிங் சோடா சேர்த்து நன்கு கலந்து, மருக்களின் மீது தடவி 30 நிமிடம் கழித்து, வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு 2-3 முறை என 15 நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால், மருக்கள் உதிர்ந்துவிடும்.
டீ-ட்ரீ எண்ணெய்: 4-5 டீஸ்பூன் நீரில், 2-3 துளிகள் டீ-ட்ரீ எண்ணெயை சேர்த்து கலந்து, பஞ்சு உருண்டையின் உதவியுடன் அக்கலவையை மருக்களின் மீது தடவ வேண்டும். பின் அப்பகுதியை உலர வைக்க வேண்டும். இந்த செயல்முறையை ஒரு நாளைக்கு தினமும் 3 முறை என ஒரு மாதம் தொடர்ந்து செய்ய மருக்கள் உதிர்ந்துவிடும்.
நக பூச்சு: இது மிகவும் எளிமையான ஒரு வழி. அது என்னவெனில் நக பூச்சை (நெயில் பொலிஷ்) மருக்களின் மீது தடவ வேண்டும். இச்செயலை தினமும் பலமுறை செய்து வந்தால், சீக்கிரம் மருக்கள் உதிர்ந்துவிடும்.
எலுமிச்சை சாறு: ஒரு எலுமிச்சை பழத்தை இரண்டாக வெட்டி, அதன் ஒரு பாதியைப் பிழிந்து சாறு எடுத்து, பஞ்சு உருண்டையில் நனைத்து மருக்களின் மீது தடவுங்கள். இப்படி தினமும் செய்து வந்தால், மருக்கள் விரைவில் காய்ந்து உதிரும்.