Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

யாராலும் நெருங்க முடியாத சாதனை – இலங்கையின் இளம் வீரர் அசத்தல்

In
Published: 04:50 GMT, Dec 15, 2017 |
0 Comments
3143
icon_com
This post was written by : Sujitharan
Sports News Fo Web

கிரிக்கட் வரலாற்றில் என்றுமில்லாத புதிய உலக சாதனை ஒன்றை, இலங்கையின் இளம் கிரிக்கட் வீரர் ஒருவர் படைத்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை நடைபெற்ற ‘முரளி நல்லிணக்க கிண்ண’ இறுதிப் போட்டியில், முறையற்ற பந்து அடங்கலாக, ஒரே ஓவரில் 7 ஆறு ஓட்டங்களைப் பெற்று இந்த சாதனைப் படைக்கப்பட்டுள்ளது.

பலபிட்டிய, ரேவேத கல்லூரியின் 15 வயதுக்குட்பட்ட அணிக்காக விளையாடும் நவிந்து பஹசரா என்ற சிறுவனே இந்த சாதனையைப் படைத்துள்ளார்.

நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் முரளிதரனின் சாதனையை நினைவுபடுத்தியும், அவரை கௌரவப்படுத்தும் வகையிலும் நடைபெற்ற இந்த முரளி நல்லிணக்க கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில், முரளிதரன் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்திருந்தார்.

இதற்கு முன்னர் ஒருநாள் சர்வதேச போட்டிகளில் இந்திய அணியின் யுவராஜ் சிங் இங்கிலாந்து அணிக்கு எதிராகவும், தென்னாப்பிரிக்காவின் கிப்ஸ் நெதர்லாந்து அணிக்கு எதிராகவும், ஒரே ஓவரில் 6 ஆறு ஓட்டங்களை அடித்திருந்தனர்.

அதேபோல், விவ்வியன் ரிச்சர்ட்ஸ், ரவி சாஸ்திரி ஆகியோர் முதல்தர கிரிக்கெட்டில், ஒரே ஓவரில் 6 ஆறு ஓட்டங்களை அடித்திருந்தமைக் குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg