Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிரிய பிரச்சினை புதிய அணுகுமுறை மூலம் கையாளப்பட வேண்டும்: எதிர்க்கட்சி

In உலகம்
Updated: 05:28 GMT, Dec 15, 2017 | Published: 05:28 GMT, Dec 15, 2017 |
0 Comments
1310
This post was written by : Risha

சிரியாவில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு சர்வதேச சமூகம் புதிய அணுகுமுறைகளை கையாள வேண்டும் என சிரிய எதிர்க்கட்சியின் பிரதம பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

ஜெனீவாவில் நடைபெற்ற எட்டாவது சுற்று சிரிய சமாதான பேச்சுவார்த்தைகளின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”ஏழாண்டுகளாக நீடிக்கும் சிரிய போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான அரசியல் தீர்வை பெறும் முயற்சியானது அபாயகரமான திசையில் சென்றுக் கொண்டிருக்கிறது.

எனவே, இப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு சர்வதேச சமூகம் புதிய அணுகுமுறைகளை கையாள வேண்டும். இன்றேல் இவ் இக்கட்டான சூழ்நிலை தொடர்ந்து நீடிக்கும்.

அதுமாத்திரமின்றி துரதிஷ்டவசமாக நாட்டின் உள்ளேயும் வெளியேயும் உள்ள சிரியர்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்படுவர்” என்றார்.

ஜெனீவாவில் கடந்த நொவம்பர் 28ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட சிரிய சமாதான பேச்சுவார்த்தைகளானது எவ்வித முன்னேறகரமான முடிவுகளும் எட்டப்படாத நிலையில் நேற்றுடன் நிறைவடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg