Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒற்றுமையை சோதிக்கும் இரண்டாம் சுற்று பேச்சுவார்த்தை!

In ஐரோப்பா
Published: 05:58 GMT, Dec 15, 2017 |
0 Comments
1075
This post was written by : Risha

இரண்டாம் சுற்று பிரெக்சிற் பேச்சுவார்த்தைகள், ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒற்றுமையை சோதிக்கும் வகையில் அமையும் என ஐரோப்பிய கவுன்சில் தலைவர் டொனால்ட் டஸ்க் தெரிவித்துள்ளார்.

பிரஸ்சல்ஸில் இடம்பெற்ற ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களின் மாநாட்டின் ஒரு அங்கமாக நேற்று (வியாழக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”கடந்த ஆறு மாதங்களாக நடைபெற்ற பிரெக்சிற் பேச்சுவார்த்தைகளின் மூலம் ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 அங்கத்துவ நாடுகளும் ஒற்றுமையாக செயற்பட்டுள்ளமை உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைகள் கடினமாகவே அமையும்” என்றார்.

இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைகளின் போது, பிரெக்சிற் நிலைமாற்று காலம் மற்றும் அதற்கு பின்னரான காலத்தின் போது ஐரோப்பிய ஒன்றியத்திற்கும்- பிரித்தானியாவிற்கும் இடையிலான உறவு தொடர்பாக விவாதிக்கப்படவுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg